தைப்பூசத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை தண்டாயுதபாணி முருகன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து கோவிலை அடைந்த நிலையில், தண்டாயுதபாணிக்கு நடைபெற்ற பால் அபிஷேகம், மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.