விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் தை கார்த்திகையை முன்னிட்டு சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி வலம் வந்த போது மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.