பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு செல்லும் அரசு பேருந்து உட்பட அனைத்து வாகனங்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்துகள், சுற்றுலா வாகனங்களை தடுத்து நிறுத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் தலைமையிலான குழு, நீலகிரி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவரப்படுகிறதா என சோதனை நடத்தினர். அப்போது, பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்த சுற்றுலா பயணிகளுக்கு அதிகாரிகள் நூறு ரூபாய் அபராதம் விதித்தனர்.