மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வரை இரவில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் என்ஜின் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இருப்புப் பாதை அதிர்வு பதிவு செய்ய இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனையொட்டி ரயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.