சகோதரத்துவத்தை சிதைத்துக் கொண்டு பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும் என பாஜக கூறுவதை எப்படி ஏற்க முடியும் என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் உருவ படத்தை திறந்துவைத்து பேசிய அவர், பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் ஏற்க முடியாது என்றார்.