கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டாடா தொழிற்சாலையின் கெமிக்கல் பிளான்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. வன்னிபுரம் பகுதியில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கப்படும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் நான்கு அலகில் பயங்கர தீவிபத்து ஏற்பட்ட நிலையில் வான் உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது. இதனால் அங்கிருந்து உடனடியாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த தீவிபத்து கெமிக்கல் டேங்க் சுத்திகரிப்பு பணியின் போது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்தின் போது மூச்சுத்திணறல் ஏற்பட்ட மூன்று பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.