காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமி இரண்டாம் நாளையொட்டி பெருந்தேவி தாயார் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அனந்த சரஸ் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாளுடன் எழுந்தருளிய பெருந்தேவி தாயாரை பக்தர்கள் வணங்கி வழிபட்டனர்.