செங்கல்பட்டு மாவட்டம் சிங்க பெருமாள் கோவில் அருகே பாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் உற்சவர் தெப்பத்தில் எழுந்தருளி குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றிலையில் தீபம் ஏற்றி குளத்தில் விட்டு வழிபாடு செய்தனர்.