சென்னையில் உள்ள 388 அம்மா உணவகங்களையும் மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.சமீபத்தில் அம்மா உணவகத்தை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த 21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.அதனடிப்படையில் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை ஆய்வு செய்ததில், 23 ஆயிரத்து 848 பாத்திரங்கள் மற்றும் சமையல் உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.அவற்றை புதுப்பிக்க 7 கோடியே 6 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது.