திருப்பூரில் வெயிலின் தாக்கத்தை தவிர்க்க சிக்னலில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள சிக்னலில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சிக்னலிலும் நிழற்கூரை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.