ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை படவேட்டம்மன் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முருகன், வராஹி மற்றும் பிரித்திங்கரா தேவி கோவில்களுக்கு குடமுழுக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது.