வேலூர் மாவட்டம் திருவலம் அருகே கோவிலில் உண்டியல் மற்றும் மின் மோட்டார் திருடிய நபரை கிராம மக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். லட்சுமிபுரம் கிராமத்தில் மலை மீதுள்ள தீர்த்த பொன்னியம்மன் ஆலயத்தில் உண்டியலை திருடிச் சென்ற சக்திவேல் என்ற அந்த நபர், மீண்டும் அதே கோவிலில் மின் மோட்டரை திருட வந்தபோது ஊர் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டார்.