கடலூரில் அழகுமுத்தையனார் கோவிலில் பக்தர்கள் வேண்டி வைத்த சிலைகள் இரவோடு இரவாக மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னம்பாக்கத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அருள்மிரு அழகுமுத்தையனார் கோவில் மற்றும் அருள்மிகு அழகு சித்தர் பீடம் ஜீவசமாதி கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வைத்த சிலைகள் ஜேசிபி கொண்டு அகற்றப்பட்டு இரவோடு இரவாக மண்ணில் புதைக்கப்பட்டுள்ளது. சிலைகளை புதைக்க யார் அனுமதி கொடுத்தது என்று கேள்வி எழுப்பிய கிராம மக்கள் சிலைகள் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டு பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.