மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூரில் உள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு தலைமையில் புரட்டாசி திருவிழா நடத்துவதை எதிர்த்து, கிராம மக்கள் ஏராளமானோர் காவல் நிலையத்தில் மனு அளித்தனர். ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பாக 3 நபர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டதாக கூறப்பபடுகிறது. இதற்கு கிராமத்தில் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் மற்றொரு தரப்பினர், அக்குழுவினர் முறைகேடாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.