தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பாலமுருகன் கோவிலில் சிறப்பு அலங்கார அபிஷேகம் நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன்,பஞ்சாமிர்தம்,இளநீர்,பன்னீர், திருநீர் என 11வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனை திரளான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.