தென்னக காசி எனப்படும் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பைரவர் கோவிலில் நடைபெற்ற, தேய்பிறை அஷ்டமி பூஜையில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேய்பிறை அஷ்டமி பூஜையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில், பைரவர் சிலைக்கு பக்தர்கள் தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டனர்.