தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீட்டு பாடம் எழுதி வராததால் வகுப்பறையின் வெளியே நிறுத்தப்பட்ட மாணவன் பள்ளி முதல் மாடியிலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடியிலிருந்து குதித்ததில் மாணவனுக்கு வலது கை மற்றும் முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.