திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி சென்று மினிவேன் மற்றும் மின்கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக டீ கடை மாஸ்டரை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்த சின்னதம்பி என்பவர் கோவில்பட்டியில் டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இவர்,மது போதையில், தனது காரை நத்தத்தில் இருந்த கம்பூர் அருகே தாறுமாறாக ஓட்டி சென்றுள்ளார்.அப்போது, எதிரே வந்த மினிவேன் மீது மோதிவிட்டு ,சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மினிவேன் ஓட்டுநர் மற்றும் மது போதையில் இருந்த டீ மாஸ்டரும் லேசான காயத்துடன் தப்பினர்.