எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்க தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு, தேர்தல் பணியாற்றுவது என அச்சங்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் TCOA மாநில பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில், TCCL நிர்வாகம் சார்பில் 10 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை மாநிலம் முழுவதும் விநியோகிக்கவும் TIC நிறுவனம் சார்பில் 10 லட்சம் இணைப்புகளை அதிகரிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டு நாள், இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் குழுவில் 1000 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.