33 லட்சம் இணைப்புகளுடன் கிராம மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்துவருவது TCCL நிறுவனம்தான் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நிறுவனத் தலைவர் பி.சகிலன் தெரிவித்தார். நாமக்கல்லில் நடைபெற்ற தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் 25-வது மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், கேபிள் ஆபரேட்டர்கள் குடும்ப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி மற்றும் கல்வி செலவு என வருடத்திற்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து வருவதாகவும், இந்த சங்கத்தை நம்பி இருந்தால் நிச்சயம் பலன் உண்டு எனவும் தெரிவித்தார்.