திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்ய, 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வரி வசூல் அதிகாரி சண்முகம், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருவேங்கடம் நகர் பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாயை முன் பணமாக வாங்கியபோது, பில் கலெக்டர் சண்முகத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.