சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பச்சக்காடு பகுதியில் டாரஸ் லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 13 பேர் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் பேருந்து மோதிய சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.