கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி வீட்டு காம்பவுண்டு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. அஞ்சுகிராமம் பகுதியில் இருந்து கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்ற டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து தேமானூர் பகுதியில் உள்ள புருஷோத்தமன் என்பவரது வீட்டு காம்பவுண்ட் சுவர் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் சுவரின் இடிபாடுகளில் சிக்கி வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு பைக்குகளும், வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையும் சேதமடைந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.