விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே டாரஸ் லாரி மோதி பெண் தூய்மை பணியாளர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியது. பாலவநத்தம் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர் மூக்கம்மாள், அருப்புக்கோட்டை சாலை திருப்பத்தில் நின்ற போது, அந்த வழியாக சென்ற டாரஸ் லாரி அவர் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி விழுந்த மூக்கம்மாள் மீது லாரி ஏறி இறங்கியதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.இதையும் படியுங்கள் : மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் வேளாண் துறை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை