ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பேருந்தின் மீது கனரக வாகனம் மோதிய விபத்து தொடர்பான பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வாலாஜாபாத் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து, சாலையை கடக்க முயன்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் வாகனம், தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்தின் மீது அடுத்தடுத்து மோதியது. .