தமிழக வெற்றிக்கழகத்தின் முதலாம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு நடத்தப்படுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள Four Points Sheraton விடுதியில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.