கோவையில் டாடா ஏஸ் வாகனத்தை திருடிய 2 பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த நிலையில் ஒருவன் தப்பிச் சென்றான். காந்திபுரம் பகுதியில் வீட்டுக்கு முன்பு நிறுத்தி இருந்த டாடா ஏஸ் வாகனம் காணாமல் போனதை கண்டு, அதிர்ச்சியடைந்த உரிமையாளர், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தகவல் கொடுத்தார். இதையடுத்து, புளியங்குளம் பகுதியில் டாடா ஏஸ் வாகனத்தையும், திருடர்களையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.