காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் அருகே விவசாய கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டாடா ஏஸ் வாகனம் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 13 பெண்கள் காயமடைந்தனர்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைபாக்கத்தில் நாற்று நடவு பணியை முடித்துவிட்டு ஏராளமான தொழிலாளர்கள் டாடா ஏஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, திடீரென டயர் வெடித்ததில் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த கால்வாயில் கவிழ்ந்தது.இதில் வாகனத்தில் பயணித்த 13 பெண்கள் காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.