புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி செட்டி ஊரணி அருகே உரம் ஏற்றி சென்ற டாட்டா ஏஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குடுமியான் மலையில் உள்ள அண்ணா பண்ணையில் இருந்து கறம்பக்குடி வேளாண் துறைக்கு உரங்களை ஏற்றி சென்ற டாட்டா ஏஸ் வாகனம் கறம்பக்குடி செட்டி ஊரணி அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பை உடைத்து கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் ஓட்டுநர் மற்றும் லோடுமேன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.