திருவள்ளூர் மாவட்டம் காரனோடை பகுதியில் பள்ளிகளுக்கு அருகே செயல்படும் டாஸ்மாக் கடையால் பெண்கள், பொதுமக்கள், மாணவிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் பள்ளிகள், வங்கிகள் என பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள், சாலையையே திறந்தவெளி பாராக மாற்றி அரைகுறை ஆடையுடன் அலப்பறை செய்வதால் அனைத்து தரப்பு மக்களும் இன்னலுக்கு ஆளாகுவதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கிராம சபை கூட்டத்தில் 3 முறை தீர்மானம் நிறைவேற்றியும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.