கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடையை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். அப்பகுதியில் செயல்பட்டு வந்த நவீன மதுபான பார் மூடப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடையையும் மூட கோரி நாதகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட நிலையில் நாதகவினர் தடுப்புகளை தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் கடையை முற்றுகையிட்டு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.