கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மற்றும் அவரது உதவியாளரை போலீஸார் கைது செய்தனர். டாஸ்மாக்கில் கூடுதலாக வசூலிக்கப்படும் பணத்தை பங்குபோடுவதற்காக நடைபெற்ற கூட்டத்தை பற்றி வெளியில் தெரிவிக்காமல் இருக்க பேரம் பேசியதாக கூறப்படுகிறது.