டாஸ்மாக் மதுபான கடைகள் பகல் 12 மணிக்கு தான் திறக்க வேண்டும் என உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் காலை முதலே மதுவிற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. 1744 எண் கொண்ட டாஸ்மாக் கடையில் காலையிலேயே சைடிஷ்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை தொடங்கியது. கடையின் பிரதான கதவை மூடிவிட்டு பக்கவாட்டில் உள்ள சிறிய கதவை திறந்து வைத்து வியாபாரம் நடந்து வருகிறது. இதுகுறித்த தகவல் தெரிந்தும் போலீசார் கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.