ராமநாதபுரத்தை அடுத்த தொண்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதல் விலை வசூலிப்பதை தட்டிக்கேட்ட வாடிக்கையாளரிடம், மேலிடம் வரைக்கும் கொடுக்க வேண்டியுள்ளது என ஊழியர் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. தொண்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற ஒருவர் பீர் வாங்கியபோது கடை ஊழியர் பத்து ரூபாய் கூடுதலாக கேட்க, அவர் எதற்கு கூடுதல் விலை என கேள்வி எழுப்பினார். அதற்கு தங்களுக்கு 9 ஆயிரத்து 500 ரூபாய் மட்டும் சம்பளம் தருவதாக புலம்பிய கடை ஊழியர் நாளொன்று ஆயிரத்து 500 பாட்டிலுக்கு மேல் விற்பனையாகிறது..பத்து ரூபாய் எங்களுக்கு மட்டும் இல்ல மேலிடம் வரைக்கும் போகுது என கூறி பகீர் கிளப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.