தேனி மாவட்டம் தாமரைக்குளத்தில் மது குடித்து சென்றவர் விபத்தில் உயிரிழந்ததால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட, அதன் எதிரொலியாக டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.கடந்த 15 நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் திறக்கப்பட்ட மதுபான கடையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, விபத்துகள் அதிகரிக்கும் என்று நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு எச்சரித்திருந்தது.ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் மெளனம் காத்து வந்த நிலையில் டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு சாலையைக் கடக்க முயன்ற முருகன் என்பவர் பைக் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.