திருப்பத்தூர் அருகே ஒரு மாதத்திற்கு முன்பு போடப்பட்ட தார்ச் சாலை, குண்டும் குழியுமாக மாறியதால், மக்கள் கொந்தளித்துள்ளனர். திருப்பத்தூர் அடுத்த பெருமாப்பட்டு பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்-2024 மற்றும் 2025ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டில், 3 கிமீ அளவிலான தார்ச் சாலை ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பில் பணி துவங்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு முன்பு தார்ச் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதமே ஆன நிலையில், ஜடையனூர் பகுதியில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. தார்ச் சாலையை சீரமைக்காவிட்டால், சாலை மறியலில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.