திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் சுமார் 20 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் ஆறாக ஓடியது. இதையடுத்து அச்சாலையில் விபத்து ஏற்படாத வண்ணம் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் டீசல் மீது மணலை கொட்டி அசாம்பாவிதங்களை தவிர்த்தனர்.