இரு மொழிக் கொள்கை கொண்ட தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை என்பது இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் பார் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 75ஆம் ஆண்டு அரசியலமைப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர்,அரசமைப்புச் சட்டத்திற்கு மெருகேற்றும் பல தீர்ப்புகளை நமது நீதியரசர்கள் வழங்கியுள்ளதாக புகழாரம் சூட்டினார்.