மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தாமல் மது ஒழிப்பு மாநாட்டுக்கு சென்றது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பியிருந்த நிலையில், காந்தி சிலைக்கு ஆளுநர் மரியாதை செலுத்திய பிறகு தான் அனுமதிக்கப்படும் என காவல்துறையினர் தடுத்ததால் மாலை அணிவிக்காமல் சென்றதாக விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் பேசிய திருமாவளவன், தமிழிசைக்கு குடிப்பழக்கம் இருக்காது என நம்புவதாக கிண்டல் அடித்தார்.