ஈரோடு மாவட்டம், லக்காபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். திருச்செங்கோடு விட்டாம்பாளையத்தில் கந்தசாமி என்பவரிடம், லக்காபுரத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், பணத்தைப் பெற்று பண்ணைக்கு வேலைக்கு வராததால் கந்தசாமி சிலருடன் வந்து முருகேசனை அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முருகேசனை அவரது மகனுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்த அதே நாளில் அவர் உயிரிழந்த நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையும் பாருங்கள் - திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினர் | Erode | Protest | Tamil Puligal Katchi