தஞ்சையை சேர்ந்த இளைஞர் ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்தார். தஞ்சை மாவட்டம் பூதலூர் அடுத்த கூடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் ஜெர்மனியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், அங்கு உடன் பணியாற்றி வரும் விலினா பெர்கனுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் உற்றார் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.