கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மடத்திற்கு சொந்தமாக 71 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை தற்போது அனுபவித்து வரும் நபர்களிடம் இருந்து மாதாமாதம் வாடகை பணம் செலுத்தவில்லை என்பதால் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி அன்று மடத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.என்னவென்றால் மடத்திற்கு சொந்தமான இடத்தை அனுபவித்து வருபவர்கள் உடனடியாக காலி செய்து தரவேண்டும் என்றும் மீண்டும் அந்த இடத்தை மடத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மடத்தின் இடத்தை அளவீடு செய்து மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் ஒரு வீட்டை காலி செய்தனர். தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று மடத்தின் இடத்தில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வந்த நீதிமன்ற அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் ஆந்திர மாநில அறநிலையத் துறையினரிடம் திமுக கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததால் காவல்துறை உதவியுடன் அரசு மதுபான கடை விற்பனையாளர்களை கடையில் இருந்து வெளியேற்றி கடைக்கு பூட்டு போடப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. Related Link பிழைப்புக்காக சாலையோரம் வித்தை காட்டிய சிறுவன்