தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடாமல் வளர்ந்த நாடுகளுடன்தான் ஒப்பிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் சிஐஐ தென் இந்திய மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய அவர், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்றும் கூறினார். மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 12 புள்ளி 11 சதவிகிதம் தமிழ்நாட்டின் பங்கு உள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.