மக்களுக்கு தேவையான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அருகே அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, கடும் நிதி நெருக்கடி சூழலிலும் பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மகளிர் உரிமைத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார். மேலும் வரும் டிசம்பர் முதல், விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளதாக உறுதி அளித்தார்.