தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று திராவிட மாடல் அரசு பாடுபடுவதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9 கோடியே 40 லட்சம் மதிப்பில் MRI ஸ்கேன் இயந்திரத்தை கனிமொழி எம்.பி முன்னிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட உள்ள 23 மருத்துவ கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்.பி கனிமொழி, இந்தியாவில் வளர்ந்த நாடுகள் மத்தியில் தமிழகமும் முன்னேறி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.