நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தனியார் பள்ளி ஆசிரியர் உடலுக்கு தமிழக அரசு கொறடா ராமச்சந்திரன் அஞ்சலி செலுத்தினார். குன்னூரில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு வீட்டிற்குள் புகுந்ததில் தனியார் பள்ளி ஆசிரியர் ஜெயலட்சுமி உயிரிழந்தார். இதனைதொடர்ந்து அவரது உடலுக்கு சக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் சம்பவ இடத்தை தமிழக அரசு கொறடா ராமசந்திரன் நேரில் சென்று பார்வையிட்டதோடு அஞ்சலி செலுத்தினார். அப்போது, ஆசிரியரின் கணவர் ரவீந்திரநாத்திற்கு ஆறுதல் கூறி இழப்பீடு தொகையாக 4 லட்சம் ரூபாய்க்கான ஒப்புதல் கடிதத்தையும் வழங்கினார்.