தமிழக அரசு என்றைக்குமே ஆசிரியர்களை கைவிடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். திருச்சி கே.கே.நகர் மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், TET தேர்வு கட்டாயம் என்ற தீர்ப்பின் விவரம் கிடைத்தவுடன் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றார்.