ராமநாதபுரம் மாவட்டம் மாதவனூரில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான சோதனைக் கிணறு அமைக்கும் பணியை முற்றுகையிட்டு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்படாது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்த நிலையில், அத் திட்டத்திற்காக சோதனை கிணறு அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்பணியை நிறுத்தும் வரை நகர மாட்டோம் என அங்கு அமர்ந்து விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.