கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதால், உடனடியாக உடைப்பை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து மணப்பாறைக்கு செல்லும் தமிழ்நாடு வடிகால் வாரிய கூட்டு குடிநீர் திட்ட குழாயில், கோட்டைமேடு வடிகால் வாய்க்கால் பாலம் அருகே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வீணாகி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.