அதிமுகவை பாஜக கூறு போட்டு துண்டு துண்டாக்கி விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்தார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற வாக்கு திருட்டு குறித்த விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவை உடைப்பதற்கும், சிதைப்பதற்கும் பாஜக துணிந்து விட்டதாக சாடினார்.அதிமுகவில் ஏற்படும் பிரச்சனையை தீர்க்க அமித்ஷா யார் என்றும், அக்கட்சியின் உண்மையான தலைவர்கள் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் செல்வப்பெருந்தகை வினவினார்.